உள்நாடு

பூவெலிகட கட்டிட இடிபாட்டிற்கான காரணம் வெளியானது

(UTV |  கண்டி) – கண்டி- பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கு இயற்கை காரணங்களோ காலநிலையோ பாதிப்பு செலுத்தவில்லை எனவும் நிர்மாணப்பணிகளின்போது எடுத்த தவறான தீர்மானங்களே இதற்கு காரணம் என, சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 பக்கங்களைக் கொண்ட மேற்படி அறிக்கை குழு உறுப்பினர்களால், மத்திய மாகாண ஆளுநரிடம் நேற்று(06) கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே நிர்மாணப்பணிகளில் ஏற்பட்ட தவறு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் பிறந்து 50 நாட்களேயான பெண் குழந்தை ஆகியோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது தவணையின் இரண்டாவது கட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழுவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்