உள்நாடுசூடான செய்திகள் 1

புஸ்ஸலாவ பஸ் விபத்து – 8 பேர் காயம்

(UTV | கொழும்பு) –

புத்தளம் பகுதியிலிருந்து  நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில்  ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது. புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 10.07.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 22 பேரில் 8 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நால்வர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

09 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது

மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

விமானப் பயணிகள், பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – சந்தேக நபர் கைது!

editor