உள்நாடு

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு – ரிஷாட் எம்.பி பங்கேற்பு!

புத்தளம், புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இறுதிநாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், நிஜாம் மற்றும் அதிபர் சரீக், இணைப்பாளர் இர்ஷாட், மர்சூன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

விமலவீர திஸாநாயக்க எம்.பி மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா