உள்நாடுபிராந்தியம்

புல்மோட்டை கனிய மணல் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இப்பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காணமாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்று மாலைக்குள் ஊழியர்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் தெரிவித்த நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் தீர்வு தருவதாக அறிவித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கனிய மணலை ஏற்றுவதற்கு இடமளிக்கவில்லை எனவும் இதன் போது ஊழியர்கள் தெரிவித்தனர்.

-ஹஸ்பர் ஏ.எச்

Related posts

ஒவ்வொரு பெண்ணும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி

editor

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

editor

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !