உள்நாடு

புலி இறைச்சி விற்பனை – மூவர் கைது

(UTV | கண்டி) – கண்டி, உடுதும்பர பிரதேசத்தில் சிறுத்தை புலியொன்றை கொலை செய்து இறைச்சிற்காக விற்பனை செய்துக் கொண்டிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுதும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிறுத்தை புலியின் இறைச்சி மற்றும் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் (25) தெல்தெனிய நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

📌 LIVE UPDATE || வரவு-செலவுத்திட்ட உரை – 2024

சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த சுமந்திரன்!

ஜனாதிபதி ரணிலின் சத்தியப்பிரமாணம் பாராளுமன்றத்தில்..