இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைப் கெளரவிக்கும் நிகழ்வு !
இரத்தினபுரி கோணகும்புர மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
மேற்படி சித்திப்பெற்ற ஏழு மாணவர்களையும் மற்றும் 70 க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (09)
மேற்படி பாடசாலை மண்டபத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில்
நடைபெற்றது.
இதன்போது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்