புறாக்கள் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே இன்று (18) பிற்பகல் பேலியகொட, மீகஹவத்த பகுதியில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வத்தளை, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
