சூடான செய்திகள் 1

புறா தீவுக்கு காலவரையறையின்றி பூட்டு

(UTV|COLOMBO)-புறா தீவை காலவரையறையின்றி தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கடற் கொந்தளிப்பே இத் தீவை மூடுவதற்கு காரணமென, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சிலவேளைகளில் இந்த மாதம் முடிவடையும் வரை புறா தீவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாதென குறித்த தீவுக்கான பொறுப்பாளர் பீ.டீ. சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.

எனவே கடற்கொந்தளிப்பு சாதாரண நிலைக்கு வரும் வரை தாம் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு சுற்றுலா பிரயாணிகளிடம்  சுனில் சாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்;உத்தியோகபூர்வ முடிவுகள்

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று