அரசியல்உள்நாடுவீடியோ

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும் வாழ்த்துக்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

இவ்வருடம் அல்லாஹ்வின் பேரருளால், அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று, இப் புனித கடமையை நிறைவேற்ற பயணமாகும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (11) அவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அதில் தொடர்த்து குறிப்பிடுகையில்,

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்து கடைபிடிக்கவேண்டிய கடமைகளில் ஒன்றாகும். உடல் மற்றும் பொருளாதார நீதியாக தயாராக ஒவ்வொரு முஸ்லீமும் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்புனித கடமையை நிறைவேற்ற வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை இறைவன் உங்களுக்கு நாடியிருக்கிறான்.

“லப்பைக் அல்லாஹும்ம் லப்பைக்” – உங்கள் இதயத்திலிருந்து வரும் இந்த அழைப்பை அல்லாஹ் அவனது அன்பினால் ஏற்கட்டும்.
உங்கள் ஒவ்வொரு தவாஃபையும், ஒவ்வொரு துஆவினையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளட்டும். உங்கள் அனைத்து நற்காரியங்களும் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.

அல்லாஹ் தனது அருளாலும் இரக்கத்தாலும் உங்களை தேர்தெடுத்து, தம் இல்லத்திற்கு அழைத்து புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு அளித்திருக்கிறான்.

இப்புனித பயணத்தில் எம்மையும் உங்கள் துஆக்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Related posts

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் முடங்கியது

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் தொண்டமான் எம்.பி பங்கேற்பு

editor

கப்பலின் பிரதான கெப்டன் காலி துறைமுகத்திற்கு