உள்நாடுசூடான செய்திகள் 1

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06.06.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 09.06.2025 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தினங்களுக்கு பதிலாக 26.05.2025 திங்கட்கிழமை மற்றும் 27.05.2025 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என்பதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை 26.05.2025 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில்

B.1.1.1 நாட்டில் பரவலாக சிக்கும் தொற்றாளர்கள்

சுற்றுலா செல்பவர்களுக்கான அறிவித்தல்