புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த பின் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், தனது மாமியுடன் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, குளங்கள் மற்றும் ஆறுகளில் நீராடும்போது பொதுமக்கள், குறிப்பாக சிறுவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.