உள்நாடுபிராந்தியம்

புத்தளம் நகர முன்பள்ளி ஆசிரியைகளை புத்தளம் மாநகர மேயர், பிரதி மேயர், உறுப்பினர்கள் சந்தித்தனர்.

புத்தளம் மாநகர சபைக்குட்பட்ட முன்பள்ளிகளில் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியைகளை, புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

மாநகர சபை மேயர், பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டதன் பின்பு மாநகர சபைக்கு உட்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியைகளை சந்தித்துக் கொண்ட முதலாவது அமர்வு இதுவாகும்.

இந்நிகழ்வானது புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்திருக்கின்ற புத்தளம் நகர மண்டபத்தில் வியாழக்கிழமை (14) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம்.எப்.ரின்சாத் அஹ்மத் அவர்களோடு பிரதி மேயர் நுஸ்கி நிசார், மாநகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதியுதீன், இப்லால் அமீன், எம்.டீ.எம்.சஹ்ரான், ஆசிரியர் எச்.என்.எம்.சிபாக், சித்தி சலீமா, அனூஷா ஸ்ரீவர்த்தன, மேயரின் செயலாளர் ருஸ்தி இஸ்மத், புத்தளம் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்ற அதிகாரி தயானி உள்ளிட்ட முன்பள்ளி ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

புத்தளம் நகரின் முன்பள்ளிகள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தான் அறிந்துள்ளதாகவும், இவைகளை தீர்த்து வைக்க தன்னாலான சகல முயற்சிகளையும் கூடிய விரைவில் தான் மேற்கொள்வதாகவும் ஆசிரியைகள் மத்தியில் மேயர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அதிதிகளுக்கு முன்பள்ளி ஆசிரியைகளினால் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

-எம்.யூ.எம்.சனூன்

Related posts

ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா

முல்லைத்தீவில் இளைஞன் அடித்து கொலை

மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் ? பொய்யான செய்தி கல்வி அமைச்சு

editor