உள்நாடுபிராந்தியம்

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்!

புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான காதி நீதிபதிக்கான வெற்றிடம் நீண்ட காலமாக காணப்பட்டு வந்ததுடன், புதிய காதி நீதிபதியை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சையும் அண்மையில் நடாத்தப்பட்டது.

இதனடிப்படையில் புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நிமிக்கப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், குருநாகல் உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் மௌலவி அல்ஆலிம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

மேலும், இடம்பெயர்ந்தோருக்கான காதி நீதிமன்றம் மற்றும் புத்தளம் காதி நீதிமன்றம் என்பனவற்றில் பல வருடங்களாக ஜூரியாக கடமையாற்றிய இவர், புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆ மஸ்ஜிதின் பிரதம இமாமாகவும், நாகவில்லு புஹாரியா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.

இவர் முஹம்மது காசிம் நஸீர் முஹம்மது ஷரீப் – காமிலா தம்பதிகளின் புதல்வராவார்.

இதேவேளை, புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை உட்பட சமூக அமைப்புக்களும் தமது வாழ்த்துக்களைத் தெரவித்துள்ளனர்.

-ரஸீன் ரஸ்மின்

Related posts

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி – நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை

editor

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor