உள்நாடுபிராந்தியம்

புத்தளம், கற்பிட்டி, சேரக்குளி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள், பீடி இலைகளுடன் இருவர் கைது

புத்தளம், கற்பிட்டி – சேரக்குளி பகுதியில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (12) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜய கடற்படையினர், கற்பிட்டி – சேரக்குளி களப்பு பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன் போது, குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகளை கடற்படையினர் சோதனை செய்தனர்.

குறித்த டிங்கி இயந்திர படகுகளில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,180 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 20,000 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளில் இருந்த இருவர் சந்தேகத்தின் பெயரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், அவர்கள் பயணித்த இரண்டு டிங்கி படகுகள், பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பனவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

-ரஸ்மின்

Related posts

SJB யின் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் ரஞ்சித் மத்தும பண்டார

editor

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை