உள்நாடுபிராந்தியம்

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு பாறை மீன்கள் மூலம் அடித்த அதிஷ்டம்

புத்தளம் உடப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா எனும் பாறை மீன்கள் சிக்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி பருவக்காலம் ஆரம்பமாகிய நிலையில், உடப்புவில் உள்ள கத்தமுட்டு வலையில் 15,000 கிலோ மீன்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

1ஆம் திகதி மதியம் கரை வலையில் மீன் பிடிக்கப்பட்டபோது, ​​கத்தமுட்டு வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் வலை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக, வலை மற்றும் பிற கடற்றொழிலாளர்களால் குறிப்பிடத்தக்க அளவு மீன் அறுவடையைப் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Related posts

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்த ரிஷாதின் கைது

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு