உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து மதுரங்குளிய நோக்கி சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும், அதில் பயணித்த மற்றுமொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மதுரங்குளிய பகுதிணை சேர்ந்த 35 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அரசியல்வாதிகள் என்போர் இரு தரப்பு இடைத்தரகர்கள்! – அஷ்ரப் தாஹிர் எம்பி

editor

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

editor