உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் நிவாரணக் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்!

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவை கோரி புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வனாத்தவில்லு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சில குடும்பங்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மதினாநகர், ரஹமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் நேற்று பல மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு தடை

மஹிந்தவுக்கு மோடியிடம் இருந்து வாழ்த்து