சூடான செய்திகள் 1

புத்தளத்தில் திடீர் வெடிப்பு சம்பவம்

 (UTVNEWS | COLOMBO) – புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாரிய சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எதனால் வெடிப்பு ஏற்பட்டது என்பதை தற்போது உறுதியாக கூற முடியாதென கழிவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பினால் அந்த பகுதியில் எவருககும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் உடனடியாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அருவக்காலு நோக்கி சென்ற 29 குப்பை டிப்பர்கள், ஜாஎல பிரதேசத்தில் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களை கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…