சூடான செய்திகள் 1

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல்போயுள்ள 4 வயது சிறுமியின் தாயாரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பொலிஸார், கடற்படை மற்றும் சுழியோடிகள் இணைந்து கலாஓயா, ஓலுமடுவ பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள சிறுமியின் தாயாரினால், குழந்தை வீசப்பட்டதாகக் கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம் – கருவலகஸ்வெவ -நீலபெம்ம பகுதியை சேர்ந்த குறித்த 4 வயது சிறுமி, கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக சிறுமியின் தாய், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, கடந்த 4 நாட்களாக சிறுமியைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

Related posts

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய விபத்து; 05 பேர் பலி – பல பேர் காயம்

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

தம்புத்தேகம சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேர் பிணையில் விடுதலை