முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இதவேளை அண்மை காலமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
