வணிகம்

புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் புதிய 25 கைத்தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிய அளவிலான தொழில்துறையினர் மற்றும் கிராம சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக தென்மாகாண கைத்தொழில் அமைச்சு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த அபிவிருத்திதிட்டங்களுக்காக மாகாண சபை 43 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடற்றொழில், கால்நடை உற்பத்தி, கைப்பணி போன்ற துறைகளில் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென்று தென்மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலைகள் குறைப்பு