உள்நாடு

புதிய வைரஸ் பரவல் – சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களின் விபரங்கள் சேகரிப்பு

சீனாவில் உயர் கல்வி மற்றும் மேற்படிப்புக்காக தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் தங்கள் விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கோரியுள்ளது.

தற்போது, தூதரகத்தில் அரச உதவித்தொகை பெறும் மாணவர்களின் பதிவுகள் மட்டுமே உள்ள நிலையில் இயற்கை பேரழிவுகள் போன்ற அவசரநிலைகளின்போது உதவி வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் தூதரகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், சீனாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Related posts

MCDONALD’S உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை- ABANS

சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor

கல்கிசை சிறுமி விவகாரம் : 4 இணையத்தளங்களுக்கு தடை