உள்நாடு

புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ராஜபக்ச அவர்களுடன் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமானதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதையடுத்து நான் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல்

editor

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

வந்திறங்கும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு