உலகம்

புதிய பாப்பரசராக ரோபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரோபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நல குறைவால் தமது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி நித்திய இளைப்பாறினார்.

இதனையடுத்து புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக வத்திகானில் நேற்று (07) 250 கர்தினால்கள் குவிந்த நிலையில், 80 வயதிற்கு உட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர்.

இதற்காக சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கர்த்தினால்கள் ஒன்று இரகசிய வாக்கெடுப்பில் ஈடுட்டனர்.

நேற்று மாலை நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்க முடியாததால் இன்று காலை மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

எனினும் அதன்போதும் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதை காட்டும் விதமாக புகைபோக்கியிலிருந்து கரும்புகையே வௌியானது.

இந்நிலையில் இன்று மாலை புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.

இதற்கமைய புதிய பாப்பரசராக ரோபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

twitter நிறுவனத்தின் புதிய CEO

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்