அரசியல்உள்நாடு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றியதோடு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன.

முதலாவது தேசிய பட்டியல் ஆசனத்திற்கு ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தற்போது , இரண்டாவது தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை மிரட்டல்

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின