உள்நாடு

புதிய ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவு!

(UTV | கொழும்பு) –

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் வியாழக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. புதிய தலைவருக்கான தெரிவுப் போட்டியில், பல்கலைக்கழக ஆசியர்களின் அதிகமான வாக்குகளை பெற்று பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முதற் தொகுதி மாணவர்களுள் ஒருவராகிய பேராசிரியர் எ.எம்.எம். முஸ்தபா, கடந்த காலங்களிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார். இந்நிலையிலே, இவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் சேவைகள் தாமதம்!

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது