உள்நாடு

புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு – 2வது நேர்முகத்தேர்வு இன்று

(UTV | கொழும்பு) – புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று (09) நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், முதலாவது நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்சிகளுக்கு இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பதிவிற்காக விண்ணப்பித்த 159 புதிய அரசியல் கட்சிகளில், 20 கட்சிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தொடர்ச்சியாக 4 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டிருத்தல், கட்சியை நடாத்திச் செல்வதற்கான நிதி கையிருப்பில் இருத்தல் உள்ளிட்ட பல காரணிகள், புதிதாக பதிவு செய்யப்படும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான விடயங்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

எரிபொருள் பெறும் அனைவருக்கும் காஞ்சனவிடமிருந்து விசேட அறிவித்தல்

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தந்தையும் 6 வயது மகளும் பலி

editor

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது