உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனத்தினால் இளைஞர்களின் போராட்டத்தினை நிறுத்த முடியாது

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 40 பேர் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சி ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தற்போதைய எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நியமனம் காரணமாக இளைஞர்களின் போராட்டம் நிறுத்தப்படாது என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக எழுந்து நிற்கும் இளைஞர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆசிகளையும் வழங்கினார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறிசேன அரசாங்கத்திடம் கோரினார்.

Related posts

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கு 2, 500 பசுக்களை கொண்டுவர அரசு தீர்மானம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

editor