சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் மோதி இத்தாலி பிரஜை உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதிய வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரத வீதிக்கு குறுக்காக சென்ற குறித்த நபர் அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பரிசோதனை புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த நபரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

67 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது

இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வருகை

கபில அமரகோன் உயிரிழப்பு…