உள்நாடு

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு

ஆண்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஆண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்சமயம் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியில்

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்