உள்நாடு

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

(UTV | மட்டக்களப்பு) – பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறும் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென அவரது கட்சியினர் இன்று, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், பிள்ளையான் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதியளித்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதான பிள்ளையான், கடந்த 4 வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு ஆரம்பம்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி விவகாரம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

editor