வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவற்துறை அலுவலருக்கு பதவி உயர்வு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த காவற்துறை அலுவலர் சமிந்த அபேவிக்ரம காவற்துறை சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் காவற்துறை ஆய்வாளர் நியோமால் ரங்கஜீவ தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலுமொரு காவற்துறை அதிகாரியொருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் , சம்பவத்தில் காயமடைந்த மூன்று குழந்தைகள் மற்றும் 29 வயதுடைய இளைஞர் ஆகியோர் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related posts

டமஸ்கஸ்சில் குண்டு வெடிப்பு ; 35 பேர் பலி

Navy arrests 3 persons with ammunition

சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்