உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் நேற்று 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று நேற்று ஏற்பட்டது.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாவோ தீவின் கிழக்கே சுமார் 374 கிலோ மீற்றர் தூரத்தில் இந்நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது சக்தி வாய்ந்த நிலநடுக்கமான போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

சீனாவுக்கு பயந்து ‘OMICRON’ என பெயர் சூட்டியதா?

உலகில் முதன்முறையாக இலவச பொதுப் போக்குவரத்து சேவை அமுல்

ரோஹிங்கியா மக்களை மியன்மார் அரசு பாதுகாக்க வேண்டும்