உலகம்

பிறந்த 48 மணி நேரத்தில் குழந்தையை தாக்கியது கொரோனா

(UTV|சீனா) – சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு பிறந்த குழந்தைக்கு , பிறந்து 30 மணி நேரத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளன.

கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று பரவி இருப்பதை இது குறிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு தாயை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கடுமையாக மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் பிறந்த 30 மணி நேரத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட்டதை சோதனையின் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்

Related posts

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் | வீடியோ

editor

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் வலுக்கிறது