உள்நாடு

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி – 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர்.

அந்த பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீதமிருந்த கேக்கை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.

இதனால், குறித்த கேக்கை சாப்பிட்ட 5 வயது பெண் பிள்ளையும், 3 வயதான ஆண் குழந்தையும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அவதானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பொது சுகாதார அதிகாரிகள் உரிய வெதுப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் போட்டி – ரிஷாட்

editor

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!