(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
+++++++++++++++++++++++++++ UPDATE @11:20am
பிரேமலால் ஜயசேகரவால் ரீட் மனு தாக்கல்
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தனக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு கோரி ரீட் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 89 ஈ சரத்தின் படி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாயின் அவரின் வாக்குரிமை நீங்குவதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
