உலகம்

பிரேசிலில் 5 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் நேற்று புதிதாக 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,341-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் 514,992 பேர் பாதிக்கப்பட்டடுள்ளதுடன், 206,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா வைரஸ் 2 வருடங்களில் முடிவுக்கு வரலாம்

யெமன் கடலில் படகு விபத்து – 68 அகதிகள் பலி – 74 பேரை காணவில்லை

editor

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை