வகைப்படுத்தப்படாத

பிரேசிலில் வங்கிக்கொள்ளை முயற்சியில் 12 பேர் உயிரிழப்பு..

பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில்  பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார்  சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மோதலில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.

2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

තද වැසි හා ප්‍රභල අකුණු පිළිබඳ අනතුරු ඇඟවීමක්

பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

Sri Lanka all set for Expo 2020 Dubai