அரசியல்உள்நாடு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ம.வி.மு செயலாளர் சந்திப்பு

நேற்று (21) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அலுவல்களுக்கான முதலாவது செயலாளர் டொம் சொப்பர் அவர்களும், ஆலோசகர் இன்சாப் பாகீர் மாக்கர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் சர்வதேச பிரிவுக் குழுவின் உறுப்பினர், சட்டத்தரணி மது கல்பனா தோழரும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts

A/L விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி