பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.