உலகம்

பிரிட்டனின் உள்துறை அமைச்சராக முஸ்லிம் பெண் நியமனம்

பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக ஷபானா மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறை அமைச்சர்.

பிரிட்டனில் மிக உயர் பதவிகளில் ஒன்றான உள்துறை அமைச்சராக ஒரு முஸ்லிம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை.

பிரிட்டனில் தொழில் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் வரி செலுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் ஏஞ்சலா ரேய்னர் பதவி விலகினார்.

இதையடுத்து பிரிட்டன் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லாமி துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். பல்வேறு துறை அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டும் மாற்றப்பட்டுமுள்ளனர்.

இந் நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சராக ஷபானா மஹ்மூத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷபானா மஹ்மூத் பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.

ஏஞ்சலா ரேய்னரின் இராஜிநாமாவுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் யெவெட் கூப்பர் பதவியேற்ற நிலையில் தற்போது ஷபானா மஹ்மூத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பலி – இருவர் காயம்

editor

எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி

COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று