வகைப்படுத்தப்படாத

பிரான்சின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு:இருவருக்கு மத்தியில் கடும் போட்டி

 

(UDHAYAM, COLOMBO) – பிரான்சின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று ஆரம்பமானது.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான முதல் சுற்று வாக்களிப்புகளின் படி, இம்மனுவேல் மெக்ரோன் மற்றும் மெரின் லீ பென் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கணிப்புகளின் படி, இம்மனுவேல் மெக்ரோன் 23.7 வீத ஆதர பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், மெரின் லீ பென் 21.7 வீத ஆதரவினை பெற்றுள்ளார்.

இந்த முறை 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், முன்னிலை பெறும் இரண்டு வேட்பாளர்கள் இறுதி சுற்று வாக்கெடுப்பில் பங்குகொள்வர்.

அதன்படி, அடுத்த மாதம் 7ஆம் திகதி பிரான்சின் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடத்த வாரம் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினை தொடர்ந்து வாக்கெடுப்புகள் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.

Related posts

ஜனவரி முதல் சந்தையில் பொலிதீன் பேக் தட்டுப்பாடு

Archdiocese of Colombo receives Rs. 350 m to help Easter attack victims

SLFP to discuss SLFP proposals today