வகைப்படுத்தப்படாத

பிரயாணச் சீட்டு தொடர்பில் பேருந்து சங்கங்கள் இரட்டை நிலைப்பாட்டில்

(UDHAYAM, COLOMBO) – மேல்மாகாணத்தின் தனியார் பேரூந்துகளின் பயணம் செய்யும் பயணிகளுக்கு பிரயாண சீட்டு கட்டாயமாக்கப்படுள்ளமை தொடர்பில் பேரூந்து சங்கங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், பிரயாணச் சீட்டை கட்டாயப்படுத்துவதற்கு முன்னர் தனியார் பேரூந்து துறையை கட்டியெழுப்ப பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக, அகில இலங்கை தனியார் பேரூந்து சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளை முதல் இவ்வாறு பயணச்சீட்டு கட்டாயப்படுத்தப்படுவதற்கு தமது சங்கம் இணக்கத்தை வெளியிடுவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பயணிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையிலேயே நாளை முதல் தனியார் பேரூந்துகளின் பயணச்சீட்டை கட்டாயப்படுத்துவதாகவும் பயணிகள் பயணச்சீட்டை வைத்திருத்தல் அவசியம் எனவும் மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்த நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

No evidence to claim IS linked to Easter Sunday attacks – CID

பூட்டை உடைத்து பாடசாலையை திறக்க உத்தரவு அதிபர் வராததால் கண்டி தெல்தோட்ட பாடசாலையில் சம்பவம்

මරණ දඬුවමට එරෙහි අභියාචනාධිකරණ පෙත්සම යළි සළකා බැලීම හෙටට කල් යයි