விளையாட்டு

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு…

(UTV|SOUTH AFRICA) தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்(39), ஒருநாள் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள எதிர்வரும் 2019ம் உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் 95 இல் விளையாடி 156 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

மேலும், 2020 இல் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் விளையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தாயகம் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள்-படங்கள்

119 ஓட்டங்களை பெற முடியாமல் சுருண்ட மும்பை அணி

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்