உள்நாடு

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் – ஒருவர் கைது

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

2022.08.02 அன்று முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லேரியா வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.

விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த குற்றத்தைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த சந்தேகநபர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாஹேன பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 05 கிராம் 430 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் தலாஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

மேலதிக விசாரணைகளின் போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

குருணாகலையில் கேபிள் கார் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

editor

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நமது நாட்டுக்கும் எமது பிரஜைகளுக்கும் ஒரு புதிய விழுமியக் கட்டமைப்பு தேவை – ஜனாதிபதி அநுர

editor