உள்நாடு

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

(UTV | கொழும்பு) – நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (05) இடம்பெறவிருக்கின்றது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்துகொண்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்றைய தினம் அறிவித்தார்.

இந்நிலையிலேயே பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு இன்று (05) நடைபெறவிருக்கின்றது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

நெருக்கடிக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதால், எந்த அணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

மஹர சிறைச்சாலை கலவரம் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்