அரசியல்உள்நாடு

பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க போல் நடித்து மோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, தன்னைப் போல நடித்து பொதுமக்களிடம் பணம் கேட்கும் மோசடி நபர் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு அறிக்கையை வெளியிட்ட பிரதிமைச்சர், ஒரு நபர் தன்னைப் போல் நடித்து பொய்கூறி நிதி உதவி மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கோருவது குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறினார்.

தெரியாத நபர்களுடன் பணத்தையோ அல்லது முக்கியமான தனிப்பட்ட தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்க, சந்தேகத்துக்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாக பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறுமஅவர பொதுமக்களை வலியுறுத்தினார்.

சாத்தியமான மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, விழிப்புடன் இருக்கவும், இந்த எச்சரிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதிகாரிகள் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

editor

சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் அரசியல் செய்கின்றவர்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor

பாதாள குழுக்களுடன் நான்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor