சூடான செய்திகள் 1

பிரதான வீதிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு தடை ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பொலிஸாரால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், தேவையற்ற விதத்தில் ​வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவும் வாகனங்களை அப்புறப்படுத்த தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த நடவடிக்கை நாடுபூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களால் முன்னெடுக்கப்படுமென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு

ஜனாதிபதி நாடு திரும்பினார்