வகைப்படுத்தப்படாத

பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள அனைத்து பிரதான வீதிகளையும் புனரமைத்து பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதே வேளை தற்காலிகமாக பயணப் பாதையொன்றை அமைப்பதற்கு பாதிக்கப்பட்ட வீதிகளில் உள்ள மண் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகின்றன என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கமல் அமரவீர தெரிவித்தார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுரைக்கமைய, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கமல் அமரவீர கூறினார்.
பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்கு தேவையான செலவினங்கள் குறித்த மதிப்பீடுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி

Veteran Radio Personality Kusum Peiris passes away

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தீ விபத்து!