உள்நாடு

பிரதம நீதியரசர பதவிக்கு பத்மன் சூரசேனவுக்கு அங்கீகாரம்!

அடுத்த பிரதம நீதிபதி பதவிக்கு பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் அரசியலமைப்பு சபைக்கு பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை சமர்ப்பித்தார்.

அதன்படி, இன்று (23) நடைபெற்ற அரசியலமைப்பு சபை கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் சிரேஷ்ட நீதிபதிகளில் ஒருவரான பிரீதி பத்மன் சூரசேன, முன்னர் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இதேவேளை, தற்போதைய பிரதம நீதிபதி முர்து பெர்னாண்டோ இந்த மாதம் 27 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

Related posts

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

வீதியால் பயணித்த ரிஷாடின் ஆதரவாளர்கள் மீது வழிமறித்து மஸ்தானின் ஆதரவாளர்கள் தாக்குதல்

editor

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி